ஹைலைட்ஸ்
- மக்களைச் சந்திக்க வந்த போப் பிரான்சிஸ் ஒரு கன்னியாஸ்திரிக்கு முத்தமிட்டுள்ளார்.
- போப் சொன்ன பதிலைக் கேட்டு சுற்றியிருந்த அனைவரும் சிரித்தனர்.
போப் பிரான்சிஸ் தன்னைச் சந்தித்த ஒரு கன்னியாஸ்திரிக்கு முத்தம் கொடுத்திருப்பது அவரைப் பற்றி புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
83 வயதாகும் போப் பிரான்சிஸ் புத்தாண்டுக்கு முந்தைய தினம் நடைபெற்ற கூட்டத்தில், தன் கையைப் பிடித்து இழுத்த பெண்ணிடம் ஆத்திரத்துடன் நடந்துகொண்டார். அந்தப் பெண்ணின் கையை கோபத்தில் வேகமாக அரைந்து தள்ளிவிட்டார்.
போப்பின் இந்தச் செயல் கடுமையான விமர்சனத்துக்குள்ளானது. பின்னர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட போப், அந்தப் பெண்ணிடம் தான் நடந்துகொண்ட விதம் தவறான முன்னுதாரணமாக அமைந்துவிட்டது என வருத்தம் தெரிவித்தார்.
போப்பின் இந்தச் செயல் கடுமையான விமர்சனத்துக்குள்ளானது. பின்னர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட போப், அந்தப் பெண்ணிடம் தான் நடந்துகொண்ட விதம் தவறான முன்னுதாரணமாக அமைந்துவிட்டது என வருத்தம் தெரிவித்தார்.
போப் முத்தமிடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. அதில், போப்பை நோக்கி அந்த கன்னியாஸ்திரி, "போப், ஒரு முத்தம்!" எனக் கேட்கிறார். அதற்கு போப், "நான் முத்தம் கொடுக்கிறேன், ஆனால் நீங்கள் கடித்துவிடக்கூடாது" என்று கூறினார்.