மந்தநிலையில் இருக்கும் நாட்டின் பொருளாதாரம், வேலைவாய்ப்பின்மை அதிகமாக இருக்கும் சூழலின் மத்தியில்தான் டிரம்ப் வருகை இருக்கிறது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு இது ஒர் அரசியல் ஆதாயமாக அமையும் என்கிறார் ப்ரூக்கிங்க்ஸ் திங்-டேங் நிறுவனத்தின் இயக்குநர் தன்வி மதன்.
"அனைத்து புகைப்படங்களிலும் உலகின் மிக சக்தி வாய்ந்த தலைவர் ஒருவருடன் மோதி இருப்பார்" என்கிறார் அவர்.
இந்நிலையில், டிரம்ப் நிர்வாகத்தின் முக்கிய கொள்கையின் ஒரு பகுதிதான் அவர் இந்தியா வருவது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால், இந்தியா வருவதால் அமெரிக்க அதிபருக்கு என்ன லாபம் என்பது முக்கிய கேள்வியாக உள்ளது. நீண்ட பயணங்களை விரும்பாதவர் என்று அறியப்படும் டிரம்ப், இந்தியா வரை ஏன் வர வேண்டும்